
மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை மினு முனீர், பத்தாண்டுகளுக்கு முன்பு கேரளாவில் இருந்து 14 வயது சிறுமியை சினிமா வாய்ப்புக்காக சென்னை அழைத்துவந்ததாக கூறப்படுகிறது. அப்போது, சென்னையில் உள்ள ஒரு விடுதி அறையில், சிறுமிக்கு நான்கு நபர்கள் பாலியல் துன்புறுத்தல் கொடுத்த சம்பவத்தில், நடிகை உடந்தையாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக சிறுமி அளித்த புகாரின் பேரில், கேரளா போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். ஆனால், சம்பவம் சென்னை பகுதியில் நடந்ததால், வழக்கு திருமங்கலம் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து, திருமங்கலம் போலீசார் கேரளா நடிகை மினு முனீரை கைது செய்து, சென்னை கொண்டு வந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.