
சென்னை வடபழனி அருகே 14 வயது சிறுவன் இயக்கிய கார் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் நின்றுகொண்டிருந்த முதியவரை மோதிய நிலையில் தற்போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது
சென்னை வடபழனியை சேர்ந்தவர் ஷாம் என்ற நபர் தன்னுடைய 13 வயது மகனிடம் வெளியே நிறுத்தப்பட்டிருக்கும் கார் மீது கவர் போடும்படி தெரிவித்து சிறுவனிடம் காரின் சாவியை கொடுத்துள்ளார்.
ஆனால் அந்த சிறுவன் தந்தையின் அனுமதி இல்லாமல் காரை எடுத்துச் சென்று ஓட்டியுள்ளார்.
அப்பொழுது குமரன் நகர் மெயின் ரோடு சந்திப்பு பகுதியில் கார் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக சென்றுள்ளது
இந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகிள்ளது. கார் அதிவேகமாக வந்து ஒரு இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோ ஒன்றை மோதிவிட்டு சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த முதியவரையும் மோதுவதை காணொளியில் காணமுடிகின்றது
இந்த சம்பவத்தில் மகாலிங்கம் என்ற அந்த முதியவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார்.தொடர் சிகிச்சை பெற்று வந்த முதியவர் மகாலிங்கம் தற்போது உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த விபத்தை ஏற்படுத்திய சிறுவன் மற்றும் அவனது தந்தை ஆகிய இருவரின் பேரிலும் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ள பாண்டி பஜார் போலீஸார் சிறுவனின் தந்தையை கைது செய்துள்ளனர்
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் வாகன சாவி ஒப்படைக்கும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியதையும், குறைந்த வயதிலேயே வாகன ஓட்டுவது எவ்வளவு ஆபத்தான தென்றும் இந்த சம்பவம் எடுத்துக் காட்டியுள்ளது