11 ம் வகுப்பு மாணவனுக்கு அரிவாளால் வெட்டு – ஐந்து சிறார்கள் கைது!

News report showing incident where an 11th grade student was attacked with a sickle; five minors taken into custody.


நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகேயுள்ள அரசுப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வரும் மாணவனொருவர், தனது சக மாணவியுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் குடும்பத்தினர் முன்பே அந்த மாணவனுக்கு எச்சரிக்கை வழங்கியிருந்தனர்.

இந்நிலையில், மாணவியின் சகோதரர் தனது நண்பர்கள் ஐந்து பேருடன் சேர்ந்து, குறித்த மாணவனின் வீட்டுக்குள் புகுந்து அரிவாளால் தாக்கி, வீட்டிலிருந்த பொருட்களை நாசமாக்கியதாக புகார் எழுந்துள்ளது.இந்த தாக்குதலில் மாணவன் பலத்த காயங்களுடன் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தகவல் அறிந்த சேரன்மகாதேவி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, குற்றத்தில் ஈடுபட்ட 5 சிறார்களையும் கைது செய்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.. சம்பவம் தொடர்பான விசாரணை போலீசார் தலைமையில் தீவிரமாக நடந்து வருகிறது.

இதற்கு முன்னர் இதே மாவட்டத்தில் நடந்த ஐடி ஊழியர் கவின் குமார் கொலை விவகாரத்துக்குப் பிறகு மீண்டும் ஒரு மாணவனை குறிவைத்து இந்த தாக்குதல் சம்பவம் பதிவாகியுள்ளது, நெல்லை மாவட்டத்தில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.