11 மாத இரட்டை பெண் குழந்தைகள் உயிரிழப்பு ; போலீசார் விசாரணை!

வாலிகண்டபுரம் கிராமத்தை சேர்ந்த கந்தசாமி, தனலட்சுமி தம்பதியருக்கு பிறந்த ரேஷ்மா மற்றும் தனுஸ்ரீ என்ற 11‑மாத  இரட்டைப் பெண் குழந்தைகள் அண்மையில் காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு காரணமாக அவதிப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் தனியார் மருந்தகங்களில் ஆங்கில மருந்துவாங்கி கொடுத்துள்ளனர். இருப்பினும் சரியாகாததால் தனலட்சுமி தனது தாயுடன் சேர்ந்து, குழந்தைகள் குணமடைய நாட்டு மருந்து வழங்கும் சைதானிபீயி என்ற வைத்தியரிடம் சென்று நாட்டு மருந்து வாங்கி கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் இருவரும் மூச்சு பேச்சின்றி போக அச்சமடைந்த குடும்பதினர் வாலிகண்டபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்திய நிலையில் மருத்துவமனை செல்லும் வழியில் பரிதாபமாக தனுஸ்ரீ  உயிரிழந்தார். மற்றொரு குழந்தைக்கு மூச்சுக்குழாயில் பாதிப்பு ஏற்பட்டுள்தாக திருச்சி அரசு மருத்துவமைனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு மற்றொரு குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

அதனைத்தொடர்ந்து உடற்மேற்கூராய்வு மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.